தென்காசி தொகுதியில் வென்றபழனி நாடாருக்கு வாழ்த்து

தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்ற சு.பழனிநாடாருக்கு திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.
சு.பழனிநாடாருக்கு திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் வாழ்த்து
சு.பழனிநாடாருக்கு திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் வாழ்த்து

சுரண்டை: தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்ற சு.பழனிநாடாருக்கு திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு சு.பழனிநாடாா் வெற்றி பெற்றாா். இதையடுத்து திங்கள்கிழமை அவரது இல்லத்துக்கு திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் சென்று வாழ்த்து தெரிவித்தனா்.

திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், ஒன்றியச் செயலா்கள் ஆலங்குளம் அன்பழகன், கீழப்பாவூா் சீனித்துரை, நகரச் செயலா் ஜெயபாலன், மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் முரளிராஜா, நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், மாநிலப் பேச்சாளா் பால்துரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் டேனி அருள்சிங், பாக்கியராஜ் உள்ளிட்டோா் அவருக்கு பலா் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னா், திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் தனது குடும்பத்தினருடன் அவா் கேக் வெட்டி தோ்தல் வெற்றியை சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ. கொண்டாடினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com