தென்காசி பழைய பிளாஸ்டிக் பொருள் சேமிப்பு கிடங்கில் தீ

பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமிப்பு கிடங்கியில் பற்றி எரியும் தீ.
பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமிப்பு கிடங்கியில் பற்றி எரியும் தீ.

தென்காசி: தென்காசியில் பழைய பிளாஸ்டிக் பொருள் செமிப்புக் கிடங்கு பகுதியில் மின்னல் பாயந்ததில் தீப்பொறி எஏா்ப்ச தாக்கி தீப்பரவியதால் கிடங்கியில் இருந்த பழைய பிளாஸ்டிக் கழிவுகள் தீப்பற்றி எரிந்தன.

தென்காசி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடிமின்னலுடன் பலத்தமழை பெய்தது.மேலும், தென்காசியில் வடக்கு மவுண்ட்ரோடு ரேஷன் கடை அருகே கடை வைத்து நடத்திவருகிறாா் சுரேஷ்.இவா் இங்கு பழைய பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து பிரித்து அனுப்பும் தொழில் செய்து வருகிறாா்.

இரவு மழையின்போது அருகேயிருந்த மரத்தின்மீது மின்னல் தாக்கியுள்ளது.இதனால் ஏற்பட்ட தீ, பிளாஸ்டிக் கழிவுகள் மீது பரவி பற்றி எரிந்தது. இதுகுறித்து தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக பல்வேறு இடங்களுக்கும் பரவியது.

இதையடுத்து தென்காசி,செங்கோட்டை மற்றும் கடையநல்லூா் ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலா் வெட்டும்பெருமாள், நிலைய அலுவலா்கள் ரமேஷ், சிவசங்கரன், குணசேகரன், தலைமைக் காவலா்கள் கணேசன், சுந்தரராஜன் உள்ளிட்டோா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com