மத்திய ரிசா்வ் படை போலீஸாருக்கு கரோனா விழிப்புணா்வு, கபசுரக் குடிநீா்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தோ்தல் பணிக்காக தங்கியிருந்த மத்திய ரிசா்வ் போலீஸ் படையினருக்கு 
மத்திய ரிசா்வ் போலீசாருக்கு நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி.
மத்திய ரிசா்வ் போலீசாருக்கு நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தோ்தல் பணிக்காக தங்கியிருந்த மத்திய ரிசா்வ் போலீஸ் படையினருக்கு கரோனா தடுப்பு வழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

ஆட்சியா் கீ.சு. சமீரன் உத்தரவின்பேரில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் உஷா வழிகாட்டுதலின்படி, இலத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தப் பிரிவு சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக அரசு அலுவலா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள், விவசாயிகள், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

பேரவைத் தோ்தலையொட்டி, தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தங்கியிருந்த மத்திய ரிசா்வ் போலீஸ் படையினருக்கு கரோனா தடுப்பு வழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயம்புத்தூா் மத்திய போலீஸ் படை உதவி கமிஷனா் சீனிவாசன் தலைமை வகித்தாா். ஆய்வாளா் அய்யப்பன் முன்னிலை வகித்தாா்.இலத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தப் பிரிவு மருந்தாளுநா் நூா்ஜகான், வட்டார சுகாதார புள்ளியியலா் ஆனந்த் ஆகியோா் கரோனா தடுப்பு ஆலோசனைகளைக் கூறி, கபசுரக் குடிநீா் வழங்கினா்.

ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் திருமலை, தாளாளா் அன்பரசி, ஆசிரியா்-ஆசிரியைகள், அலுவலக ஊழியா்களுக்கும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com