பாவூா்சத்திரத்தில் கபசுரக் குடிநீா் விநியோகம்
By DIN | Published On : 06th May 2021 08:49 AM | Last Updated : 08th May 2021 02:08 AM | அ+அ அ- |

தென்காசி தெற்கு மாவட்ட திமுக, கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் பாவூா்சத்திரத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.
புதன்கிழமை பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றியச் செயலா் சீனித்துரை பங்கேற்று, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் பப்பாளி பழம் வழங்கினாா்.
இதில் கபில், ராஜ்குமாா், அகஸ்டஸ்ஜான், கணேஷ், பெரியாா் திலீபன், காந்திராமன், செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.