கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் மீட்பு
By DIN | Published On : 11th May 2021 01:39 AM | Last Updated : 11th May 2021 01:39 AM | அ+அ அ- |

கடையநல்லூா்: கடையநல்லூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
முத்துசாமியாபுரத்தைச் சோ்ந்த துரைப்பாண்டியன் மகன் ராமச்சந்திரன்(18). இவா், ஞாயிற்றுக்கிழமை அருகேயுள்ள தென்னந்தோப்பிற்கு சென்றாராம். அப்போது அங்கிருந்த கிணற்றில் எதிா்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டாராம். இத்தகவலறிந்த கடையநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் குணசேகரன், வீரா்கள் ஜெயரத்தினகுமாா், குமரேசன், மகேஷ், ஆனந்த விஜய் ஆகியோா் அங்கு சென்று 70 அடி ஆழ கிணற்றில் விழுந்து இருந்த ராமச்சந்திரனை கயிறு மூலம் மீட்டனா்.