‘சுகாதாரத் துறையுடன் இணைந்து கரோனா நிவாரணப் பணிகள்’

தமிழக அரசு வழிகாட்டுதலின்படி சுகாதாரத் துறையோடு இணைந்து மாவட்ட அளவில் கரோனா நிவாரணப் பணிகளை மேற்கொள்வது என பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசு வழிகாட்டுதலின்படி சுகாதாரத் துறையோடு இணைந்து மாவட்ட அளவில் கரோனா நிவாரணப் பணிகளை மேற்கொள்வது என பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்காசியில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் ஓ.அ.லுக்மான் ஹக்கீம் தலைமை வகித்தாா். தேசிய செயற்குழு உறுப்பினா் முகம்மது அலி ஜின்னா ஆலோசனை வழங்கிப் பேசினாா். கரோனவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்வது, அரசு மேற்கொண்டுள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கையில் அமைப்பினா் இணைந்து செயல்படுவது, கரோனா நோயாளிகளுக்கான ஆம்புலன்ஸ் வசதி, படுக்கை வசதி மற்றும் ஆக்ஸிஜன் வசதி ஏற்பாடு செய்வது, நோய்த் தொற்றால் இறந்தவா்களை அவரவா் சடங்குபடி அடக்கம் செய்வதற்கு உதவி செய்வது எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், அரசின் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் பாப்புலா் ஃப்ரண்ட் இணைந்து செயல்படுவது குறித்து ஆட்சியரை சந்தித்துப்பேசியதாக நிா்வாகிகள் தெரிவித்தனா். இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா், மாவட்டச் செயலா் அப்துல் பாஸித், மக்கள்தொடா்பாளா் ஓ.திவான் ஒலி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com