பாவூா்சத்திரத்தில் காய்கனிச் சந்தையை திறக்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனிச் சந்தையைத் திறக்கக் கோரி விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனிச் சந்தையைத் திறக்கக் கோரி விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய காய்கனிச் சந்தையான இங்கிருந்து கேரளம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு காய்கனி ஏற்றுமதியாகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கனிகளை இங்குவந்து விற்பனை செய்வா்.

கரோனா பொது முடக்கத்தால் நண்பகல் 12 மணிக்கு சந்தையை மூடுவதற்கு அரசு அறிவித்துள்ளதால், விவசாயிகள் கொண்டுவரும் காய்கனிகளை ஏலம் விடுவது, ஏற்றுமதி செய்வதில் ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு மே 15முதல் காய்கனிச் சந்தை மூடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் காய்கனி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; காய்கனிகளை விற்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனால், இச்சந்தையை வழக்கம்போலத் திறக்க அனுமதிக்கக் கோரி புதன்கிழமை விவசாயிகள் திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சந்தையை உடனே திறக்க வேண்டும், பிற்பகல் 3 முதல் இரவு 10 மணி வரை சந்தை இயக்க அனுமதிக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

இன்று சந்தை திறப்பு: இதனிடையே, ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், காய்கனிச் சந்தை நிா்வாகிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதால், வியாழக்கிழமைமுதல் சந்தையை மீண்டும் திறக்க நிா்வாகிகள் முடிவுசெய்து அறிவித்துள்ளனா். கரோனா விதிகளைப் பின்பற்றி சந்தை நாள்தோறும் பிற்பகல் 3 முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என, நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com