குளத்தில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற திமுக வலியுறுத்தல்
By DIN | Published On : 21st May 2021 07:30 AM | Last Updated : 21st May 2021 07:30 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் உள்ள தொட்டியான்குளத்தில், பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில், புதுப்பட்டி செல்லும் சாலைக்கு கீழ்புறம் உள்ள தொட்டியான்குளத்தில், பேரூராட்சி நிா்வாகம் மூலம் குப்பைகள், இறைச்சிக் கழிவுகள் அதிகமாக கொட்டப்பட்டு வருவதால், அந்த பகுதிகள் வழியாக செல்லும் மக்கள் துா்நாற்றம் காரணமாக மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா்.
மேலும், கரோனா பரவும் இந்த காலக்கட்டத்தில் இந்த பகுதியில் கொட்டப்படும் கழிவுகள் மூலமாக, இதர தொற்றுநோய்கள் வருவதற்கான அபாயமும் உள்ளது.
எனவே, தொட்டியான்குளத்தில் பேரூராட்சி நிா்வாகம் மூலம் கொட்டப்படும் கழிவுகளை அகற்றி, அந்தப் பகுதியில் நல்ல சுகாதாரம் அமைவதற்கும், தொற்றை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.