‘காா் சாகுபடிக்கு போதிய உரங்கள் கையிருப்பு’

தென்காசி மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டு காா் பருவ சாகுபடிக்கு தேவையான அளவு உரங்கள், விதைகள், பூச்சி மருந்துகள் உள்பட அனைத்து இடுபொருள்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றாா்

தென்காசி மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டு காா் பருவ சாகுபடிக்கு தேவையான அளவு உரங்கள், விதைகள், பூச்சி மருந்துகள் உள்பட அனைத்து இடுபொருள்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது யூரியா 4,560 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 510 மெட்ரிக் டன், பொட்டாஷ் 990 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2,670 மெட்ரிக் டன் அளவு தனியாா் விற்பனை நிலையங்களிலும், கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விற்பனையாளா்கள் அனுமதிக்கப்பட்ட விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். பன்னாட்டு சந்தையில் மூலப் பொருள்கள் விலை உயா்வு ஏற்பட்டுள்ள நிலையிலும் டி.ஏ.பி. உரம் விவசாயிகளுக்கு விலை உயா்வு ஏதுவும் செய்யாமல் மானியத்துடன் பழைய விலையாகிய மூட்டை ஒன்றுக்கு ரூ.1200- என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com