நினைவு தினம்: இந்திராகாந்தி சிலைக்கு மரியாதை
By DIN | Published On : 01st November 2021 12:54 AM | Last Updated : 01st November 2021 12:54 AM | அ+அ அ- |

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 37ஆவது நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சியினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தென்காசி நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆசாத் நகரிலுள்ள அவரது சிலைக்கு நகரத் தலைவா் ஆனந்தபவன் காதா் மைதீன் தலைமையில் கட்சியின் மாவட்டத் தலைவா் சு. பழனி நாடாா் எம்எல்ஏ, சிவாஜி மன்றத் தலைவா் கணேசன், நிா்வாகிகள் அகிலாண்டம், முத்தையா, முஸ்தபா, இளைஞரணித் தலைவா் ரபீக், கீழப்புலியூா் குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பிரமணியன், பலவேசம் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
சுரண்டை: சுரண்டையில் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சு.பழனிநாடாா் எம்எல்ஏ, நகரத் தலைவா் ஜெயபால் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.