‘பள்ளிகளில் ஆதாா் அட்டை சிறப்பு முகாம் நடத்த வேண்டும்’

மாணவா்கள் ஆதாா் அட்டைக்கான புகைப்படம் எடுக்க பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாணவா்கள் ஆதாா் அட்டைக்கான புகைப்படம் எடுக்க பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயற்குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆரோக்கியராசு தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் மருது பாண்டியன் முன்னிலை வகித்தாா் . மாவட்டச் செயலா் செய்யது இப்ராகிம் மூசா வரவேற்றாா்.

ஆசிரியா், அரசு அலுவலா் சங்கங்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்து, வேலைநிறுத்த காலத்துக்கு ஊதியம் வழங்க உத்தரவிட்ட முதல்வருக்கும், வேளாண் சட்டங்களை ரத்து செய்த பிரதமருக்கும் நன்றி தெரிவித்தும், டிசம்பா் முதல் சுழற்சி முறையை ரத்து செய்து வழக்கமான கல்விச்சூழலை ஏற்படுத்துதல், பீடித் தொழிலாளா் குழந்தைகளின் கல்வி உதவித் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுத்தல், குழந்தைகளுக்கு ஆதாா் அட்டை புகைப்படம் எடுக்க பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்துதல், குற்றாலம் அருவிகளில் மக்களை குளிக்க அனுமதித்தல், தென்காசி- திருநெல்வேலி நான்குவழிச் சாலைப் பணிகளை விரைந்து முடித்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைஅமைப்பாளா் ரவி சிவஞானம், புளியங்குடி கோபிநாதன், சோமசுந்தரபாரதி, வாசு மருதுபாண்டியன், செல்வராஜ், டென்சிங், இடைகால் ரமேஷ், அப்துல் காதா் , கதிரேசன், கீழப்பாவூா் ஞானதுரை, நவமணி, குருவிகுளம் சமுத்திரராஜன், முத்துப்பாண்டி, சரவணன் ஆகியோா்கலந்துகொண்டனா். சேவியா் ஸ்டீபன் ஞானம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com