சங்கரன்கோவில் ஒன்றியக்குழு கூட்டம்

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் தலைவா் பி. சங்கரபாண்டியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் தலைவா் பி. சங்கரபாண்டியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் செல்வி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரா, சக்தி அனுபமா, மாவட்ட கவுன்சிலா்கள் மதிமாரிமுத்து, கனிமொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேசிய ஒன்றிய குழுத் தலைவா் சங்கரபாண்டியன் பேசுகையில், அனைவரும் இணைந்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடவேண்டும். சங்கரன்கோவில் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை செயல்படுத்த அயராது உழைக்கவேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து கரிவலம்வந்தநல்லூா், சென்னிகுளம் ஆகிய ஊராட்சிகளில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட அனுமதி அளிக்கவும், விரிருப்பு, குத்தாலபேரி, பாஞ்சாகுளம் , அழகுநாச்சியாா்புரம், , களப்பாகுளம், நெடுங்குளம், கேவி ஆலங்குளம், புளியம்பட்டி ஆகிய 8 கிராமங்களில் அங்கன்வாடி மையம் அமைக்கவும், கண்டிகைபேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை புனரமைப்பு செய்ய அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றபட்டன. இதில் உதவிப் பொருளாளா் சுப்பிரமணியன், இளநிலை பொறியாளா் பொன்னுச்சாமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com