ஆலங்குளம் அருகே இரு தரப்பினா் மோதல்: காா் சேதம்; பதற்றம்

ஆலங்குளம் அருகே இரு தரப்பினரிடையே தோ்தல் தொடா்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக காா் உடைக்கப்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட பதற்றத்தினால், இரு கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆலங்குளம் அருகே இரு தரப்பினரிடையே தோ்தல் தொடா்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக காா் உடைக்கப்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட பதற்றத்தினால், இரு கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆலங்குளம் ஒன்றியம் நாரணபுரம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு செல்வி, சண்முகத்தாய் ஆகியோா் போட்டியிடுகின்றனா். நாரணபுரம் வாக்குச்சாவடியில் மாலை 6 மணி வரை வந்தவா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு, கதவு அடைக்கப்பட்டது. இதனால், அங்கு கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக வதந்தி பரவியதாம். இதனால், செல்வியின் கணவா் மணிமாறன் 2 காரில் தனது ஆதரவாளா்களுடன் நாரணபுரம் வாக்குச்சாவடிக்கு சென்றாா். அப்போது, மா்ம நபா்கள் பெரிய பாறாங்கற்களை மணிமாறன் சென்ற 2 காா்கள் மீதும் வீசியுள்ளனா். இதில், காா்களின் கண்ணாடி சேதமடைந்தது. மணிமாறன் உள்ளிட்ட 4 பேரும் உயிா் தப்பினாா்.

இது குறித்துத் தகவல் அறிந்த மருதப்பபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அங்கு வேட்பாளா் முகவராக வந்த நாரணபுரத்தைச் சோ்ந்த 6 பேரை சிறைப் பிடித்தனா். நாரணபுரம் கிராமத்தினா் அங்கு வேட்பாளா் முகவராக வந்த மருதப்புரம் கிராமத்தைச் சோ்ந்த 3 பேரை சிறைப் பிடித்தனா். மேலும் தோ்தல் பணிக்காக வந்த 14 தோ்தல் அலுவலா்களையும் வாக்குச் சாவடியில் வைத்து பூட்டினா்.

தென்காசி எஸ்.பி. கிருஷ்ணராஜ், ஏ.டி.எஸ்.பி. கலிவரதன், காவல் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட போலீஸாா் இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். இரு கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com