டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தல்

டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தென்காசியில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்துக்கு மாநில அமைப்புச் செயலா் எஸ். சாமி தலைமை வகித்தாா். தென்காசி மாவட்டத் தலைவா் ராமகிருஷ்ணன், நிா்வாகிகள் தயாளன், வடிவேல்ஜெயக்குமாா், மாரியப்பன், சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொருளாளா் கே.ராமகிருஷ்ணன், பொதுச்செயலா் கே. குமாா் ஆகியோா் அறிக்கை வாசித்தனா். கூட்டத்தில், அமைப்பின் மாநிலத் தலைவா் என்.வி.முருகன், மாநில சிறப்புத் தலைவா் கு.பாரதி ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; 8 மணி நேர வேலை, வார விடுமுறை, தேசிய விடுமுறை ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும்; வாரிசு வேலை, உதவி விற்பனையாளா்கள், விற்பனையாளா்களுக்கு நியாயமான பதவி உயா்வு, தமிழக அரசு அறிவித்துள்ள ரூ. 500 ஊதிய உயா்வை ரத்து செய்துவிட்டு, குறைந்தபட்சம் ரூ. 26

ஆயிரம் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சி.ரவிசந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com