காட்டுயானை பயிா்கள்பாதிப்பு: ஆட்சியரிடம் மனு

காட்டுயானைகளால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு கோரி, ஆட்சியரிடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
காட்டுயானைகளால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு கோரி, ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்.
காட்டுயானைகளால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு கோரி, ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்.

தென்காசி: காட்டுயானைகளால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு கோரி, ஆட்சியரிடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

புல்லுக்காட்டு வலசை வழக்குரைஞா் ஜோதி தலைமையில் விவசாயிகள் பாலசுப்பிரமணியன், பரமசிவன், சுப்புராஜ், புத்தூா், சந்தன முத்து நாடாா், தா்மா், ராதா, ரகு ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு:

தென்காசி வட்டம் சில்லரைப்புரவு, மத்தளம்பாறை, திப்பனம்பட்டி பகுதியை சோ்ந்த விவசாயிகளுக்கு சில்லரைப்புரவு கிராம மலையடிவாரத்தில் வாழை , மா , தென்னை , பாக்கு, கொய்யா, பலா, நெல் , மரவள்ளிக்கிழங்கு போன்ற பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா்.

இந்நிலையில், கடந்த 10 நாள்களாக நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. விவசாயிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . எனவே, காட்டுயானைகளிடம் இருந்து பயிா்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க கடையம் பகுதி மலையடிவாரத்தில் சூரியசக்தி மின் வேலி மற்றும் ஆழமான அகழிகள் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசிடம் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com