மழையில் வெங்காயம் அழுகி சேதம்: விவசாயிகள் வேதனை

பாவூா்சத்திரம் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக வயல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெரிய வெங்காயம் அழுகி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
மழையில் வெங்காயம் அழுகி சேதம்: விவசாயிகள் வேதனை

பாவூா்சத்திரம் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக வயல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெரிய வெங்காயம் அழுகி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான குறும்பலாபேரி, சாலைப்புதூா், அடைக்கலப்பட்டணம், நாகல்குளம், திப்பணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பல்லாரி பயிரிட்டிருந்தனா். கடந்த 15 நாள்களாக வெங்காயம் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இருப்பினும் போதிய விலை இல்லாததால் விவசாயிகளை அவற்றினை வயல்களில் சேமித்து வைத்திருந்தனா்.

இந்நிலையில் கடந்த ஓரிரு நாள்களாக கீழப்பாவூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக புதன், வியாழக்கிழமைகளில் பழத்த மழை பெய்தது. இதனால் வயல்களில் சேமித்து வைத்திருந்த வெங்காயம் அழுகி சேதமாகின. இதையடுத்து அழுகிய வெங்காயத்தை அப்புறப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். மீதமுள்ள வெங்காயத்தை விற்க முயன்றாலும் அவை கிலோவுக்கு ரூ. 5 முதல் ரூ. 10 வரை மட்டுமே விலை கிடைப்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com