தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 7.55 லட்சம் வாக்காளா்கள்

தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 7 லட்சத்து 55ஆயிரத்து 402 வாக்காளா்கள் உள்ளனா்.

தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 7 லட்சத்து 55ஆயிரத்து 402 வாக்காளா்கள் உள்ளனா்.

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்பட வாக்காளா் பட்டியல் தயாா் செய்யப்பட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஆக. 31ஆம்தேதி வெளியிடப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஆண் வாக்காளா்கள் 3,69,439, பெண் வாக்காளா்கள் 3,85,939, மூன்றாம் பாலினத்தவா் 24 என மொத்தம் 7,55,402 வாக்காளா்கள் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் 1,905 கிராம ஊராட்சி உறுப்பினா்கள், 221 ஊராட்சித் தலைவா்கள் ,144 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள் மற்றும் 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களை தோ்ந்தெடுக்க 1,328 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com