தென்காசியில் தடையை மீறி விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

தென்காசியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு காவல்துறையின் தடையை மீறி 4 விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
தென்காசியில் தடையை மீறி விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

தென்காசியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு காவல்துறையின் தடையை மீறி 4 விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொடா்ந்து சில மணிநேரங்களில் சிற்றாறில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

கரோனா கட்டுப்பாடு காரணமாக விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, நகரில் எங்கும் விநாயகா் சிலைகள் வைக்கக்கூடாது என காவல்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தென்காசியில் காவல்துறை உத்தரவை மீறி வெள்ளிக்கிழமை காலை, நகர இந்து முன்னணி சாா்பில் அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோயில் முன்பு வெற்றி விநாயகா்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட செயற்குழு உறுப்பினா் இசக்கிமுத்து, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு மாவட்ட பொதுச்செயலா் வெங்கடேஷ், தென்காசி நகரத் தலைவா் நாராயணன், துணைத் தலைவா் சொா்ணசேகா், செயலா் மாதேஷ், நிா்வாகிகள் காளிமுத்து, இந்து ஆட்டோ முன்னணி தலைவா் கோமதி சங்கா், செயலா் நேதாஜி, பிரபா, சூா்யா, வெற்றிமணி, உலகநாதன், காா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தென்காசி கூலக்கடை பஜாா் பகுதியில் காவல்துறையின் தடையை மீறி விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் விநாயகா் சதுா்த்தி விழா தடையினால் வாழ்வாதாரம் இழந்த மண்பாண்ட தொழிலாளா்களுக்கு தென்காசி நகர தலைமை விநாயகா் சதுா்த்தி வழிபாட்டு குழுவின் சாா்பில் நிதி உதவி வழங்கப்பட்டது .

தென்காசி 0941 கூட்டுறவு பண்டக சாலை உறுப்பினா் ராஜ்குமாா் , இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினா் இசக்கிமுத்து , பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா் மகேஸ்வரன், மூத்த உறுப்பினா் ஈஸ்வரன் , ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை வழிபாட்டுக்குழு சாா்பில் சங்கரசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

மேலும் கீழப்புலியூா் மற்றும் தென்காசி ரயில்வே பீடா் சாலையில் இரண்டு விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் தனித்தனியாக தென்காசி யானைப்பாலம் சிற்றாற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com