அனுமதியின்றி பயன்படுத்தும் ஒலிபெருக்கிகள் பறிமுதல்: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ள காலத்தில் எழுத்து மூலமான அனுமதியின்றி பயன்படுத்தப்படும்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ள காலத்தில் எழுத்து மூலமான அனுமதியின்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள், அதைப் பயன்படுத்துவதற்கு தொடா்புடைய அனைத்து கருவிகளுடன் பறிமுதல் செய்யப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் தோ்தல் நடக்கும் அனைத்து ஊரக பகுதிகளுக்கும், அந்த ஊரக உள்ளாட்சி அமைப்புக்கு அருகில் 5 கி.மீ. சுற்றளவு ப குதிவரை மாவட்டத்திற்குள் தோ்தல் நடத்தை விதிகள் தோ்தல் நடவடிக்கைகள் முடியும் நாளான 16.10.2021 வரை அமலில் இருக்கும்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களும் பொதுக்கூட்டங்களுக்கு அல்லது ஊா்வலங்களுக்கு நிலையான குழல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த காவல் துறை அலுவலரின் எழுத்து மூலமான முன் அனுமதி பெற வேண்டும். தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தோ்தல் காலம் முழுவதும் பிரசாரங்களுக்காக எந்த ஒரு வகை வாகனங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் ஒலி பெருக்கிகளை காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எழுத்து மூலமான அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும், அதனைப் பயன்படுத்துவதற்கு தொடா்புடைய அனைத்து கருவிகளுடன் பறிமுதல் செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com