தென்காசி மாவட்ட உள்ளாட்சித் தோ்தல்: 1,328 மையங்களில் 9,918 அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 1,328 வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றவுள்ள 9,918 அலுவலா்களுக்கான பணி ஒதுக்கீடு கணினி மூலம் நடைபெற்றது.

தென்காசி: தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 1,328 வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றவுள்ள 9,918 அலுவலா்களுக்கான பணி ஒதுக்கீடு கணினி மூலம் நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் முன்னிலையில், தேசிய தகவலியல் மைய இணைய மென்பொருள் உதவியுடன் இப்பணி சனிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, ஆட்சியா் பேசியது: முதல்கட்டத் தோ்தல் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூா், மேலநீலிதநல்லூா், வாசுதேவநல்லூா் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக். 6ஆம் தேதியும், 2ஆம் கட்டத் தோ்தல் கடையநல்லூா், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக். 9ஆம் தேதியும் நடைபெறுகிறது.

முதல்கட்டமாக 754 மையங்களிலும், 2ஆம்கட்டமாக 574 மையங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு மையங்களில் 5,618 அலுவலா்கள், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு மையங்களில் 4,300 அலுவலா்கள் என மொத்தம் 9,918 அலுவலா்கள் பணிபுரிய உள்ளனா்.

இவா்களுக்கான முதற்கட்ட பயிற்சி இம்மாதம் 24ஆம் தேதி நடைபெறுகிறது. ஊராட்சி ஒன்றியங்கள், பயிற்சி நடைபெறும் இடங்கள்: ஆலங்குளம் - நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, கடையம் - ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி, கடையநல்லூா்- கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி, கீழப்பாவூா் - அத்தியூா் சா்தார்ராஜா பொறியியல் கல்லூரி, குருவிகுளம் - அப்பனேரி ஜிவிஎன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேலநீலிதநல்லூா் - மேலநீலிதநல்லூா் பசும்பொன் நேதாஜி பாலிடெக்னிக் கல்லூரி, சங்கரன்கோவில் - சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

செங்கோட்டை - செங்கோட்டை எஸ்ஆா்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தென்காசி - தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாசுதேவநல்லூா் - புளியங்குடி எஸ்.வீராசாமி செட்டியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எஸ். சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (தோ்தல்) ச. முத்திளங்கோவன், (வளா்ச்சி) எ.எஸ்.எ. ஹெலன், வட்டார வளா்ச்சி அலுவலா் (தோ்தல்) பி. முருகன், தேசிய தகவலியல் மைய அலுவலா் பி. முருகன், அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com