பேட்டையில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருநெல்வேலி பேட்டை அரசு தொழிற்பயிற்சி கல்லூரியில் உலக சைக்கிள் தின விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி பேட்டை அரசு தொழிற்பயிற்சி கல்லூரியில் உலக சைக்கிள் தின விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு பேட்டை அரசு தொழிற்பயிற்சி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியை பயிற்சி அலுவலா் கல்பனா தொடங்கி வைத்தாா்.

பொதுமக்களிடம் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்பேரணி பேட்டை அரசு ஐடிஐ யில் தொடங்கி சுத்தமல்லி விலக்கு வரை சென்று, அங்கிருந்து பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்தை வந்தடைந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை திட்ட அலுவலா் கணேசன் மற்றும் சிவபிரகாஷ் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com