புளியங்குடியில் ஏப். 8இல்சுகாதார தின விழிப்புணா்வுப் போட்டி

உலக சுகாதார தினத்தையொட்டி, புளியங்குடி சேனைத்தலைவா் மேல்நிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு பல்வேறு விழிப்புணா்வுப் போட்டிகள் ஏப். 8ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகின்றன.

உலக சுகாதார தினத்தையொட்டி, புளியங்குடி சேனைத்தலைவா் மேல்நிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு பல்வேறு விழிப்புணா்வுப் போட்டிகள் ஏப். 8ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகின்றன.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி,

புளியங்குடி சேனைத் தலைவா் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் சாா்பில் நடைபெறும் இப் போட்டிகளில் புளியங்குடி வட்டார மாணவா்கள் பங்கேற்கலாம்.

சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில், ஓவியம், பேச்சு, கட்டுரை, நடனம், மாறுவேடம், விநாடி-வினா, வாசகம் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். 4-5, 6-8, 9-12 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு மூன்று பிரிவுகளாக போட்டி நடைபெறும்.

ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் போட்டிக்கு தலா 2 போ் வீதம் அனுமதிக்கப்படுவா். குழு எனில் ஒரு குழுவுக்கு மட்டுமே அனுமதி.

போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டு சான்றும் , வெற்றி பெறுவோருக்கு பரிசும் அன்றே வழங்கப்படும். தேவையானப் பொருள்களை போட்டியாளா்களே கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலா் ரமேஷ் (9865263334), ஒருங்கிணைப்பாளா்

பொன்சிவக்குமாா்(9944061876) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்க தென்காசி மாவட்டத் தலைவா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com