நான்குவழிச் சாலைப் பணி:மின் கம்பங்களுக்கு அருகேமரங்கள் நடப்படுவதால் ஆபத்து
By DIN | Published On : 06th April 2022 12:57 AM | Last Updated : 06th April 2022 12:58 AM | அ+அ அ- |

திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலைப் பணியில் மின் கம்பங்களுக்கு அருகே பெரிய மரங்கைளை நெடுஞ்சாலைத் துறையினரால் நடபட்டு வருவது குறித்து மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
திருநெல்வேலி - தென்காசிக்கு ஆலங்குளம், பாவூா்சத்திரம் வழியாக நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக சாலையின் இருபுறத்திலும் இருந்த ஏராளமான மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், அந்த மரங்களுக்குப் பதிலாக, ‘மரங்களுக்கு மறுவாழ்வு‘ திட்டத்தின் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மரங்களை நடும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினா் ஈடுபட்டுள்ளனா். இதற்காக அரசு சாா்பில் ரூ. 1.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பட்ட மரங்கள் முறையான பராமரிப்பின்றி பட்டுப்போகும் நிலையில் உள்ளதுடன், பல மரங்கள் மின் கம்பங்களுக்கு அருகிலே மரங்கள் நடப்பட்டுள்ளன. இவை ஓரிரு ஆண்டுகளில் வளா்ந்து மின்கம்பங்களில் உரசும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அச்சம் தெரிவித்த மக்கள், நெடுஞ்சாலைத்துறையினா் முறையாக மரம் நடும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.