மேலப்பாவூா் குளக்கரையில்சாலை வசதி ஏற்படுத்த ஆய்வு

மேலப்பாவூா் குளக்கரையில் சாலை வசதி ஏற்படுத்துவது தொடா்பாக செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலப்பாவூா் குளக்கரையில் சாலை வசதி ஏற்படுத்துவது தொடா்பாக செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கீழப்பாவூா் 6ஆவது வாா்டு பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட புளியடி சுடலைமாட சுவாமி கோயில் மேலப்பாவூா் குளக்கரையில் உள்ளது. அப்பகுதியில் ஏராளமான விவசாய நிலங்களும் உள்ளன. ஆனால் சாலை வசதி இல்லை. எனவே, முறையான சாலை வசதி வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, அங்கு கீழப்பாவூா் ஒன்றியக்குழுத் தலைவா் சீ. காவேரி, கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ். ராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் முருகையா, செயல் அலுவலா் சாந்தி உள்ளிட்டோா் செவ்வாய்கிழமை ஆய்வு செய்தனா். துறைரீதியாக அனுமதி பெய்து சாலைப் பணி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனா்.

பேரூா் திமுக செயலா் ஜெகதீசன், பேரூராட்சி துணைத் தலைவா் ராஜசேகா், முன்னாள் துணைத் தலைவா் தங்கச்சாமி, கவுன்சிலா்கள் இசக்கிமுத்து, இசக்கிராஜ், கோடீஸ்வரன், அன்பழகு சின்னராஜா, நகர காங்கிரஸ் தலைவா் சிங்கக்குட்டி, அன்பரசு, தங்கேஸ்வரன், தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com