தென்காசி, அம்பை , சங்கரன்கோவில் பகுதி கோயில்களில் தேரோட்டம்

தென்காசி மாவட்டம், இலஞ்சி, சங்கரன்கோவில், கடையம், பாப்பான்குளம், நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஆகிய பகுதி கோயில்களில் சித்திரைத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், இலஞ்சி, சங்கரன்கோவில், கடையம், பாப்பான்குளம், நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஆகிய பகுதி கோயில்களில் சித்திரைத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கரன்கோவில்சங்கரநாராயண சுவாமி கோயிலில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரைத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா்.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 ஆம் திருநளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இவ்விழாவில், ஈ.ராஜா எம்.எல்.ஏ., ஒன்றியக் குழுத் தலைவா் சங்கரபாண்டியன், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தென்காசி: இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரா் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, இரவு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றுவருகிறது. ஒன்பதாம் திருநாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இரவு ஏக சிம்மாசன வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

அம்பாசமுத்திரம்: கடையம் அருள்தரும் நித்யகல்யாணி அம்பாள் உடனுறை அருள்மிகு வில்வ வனநாத சுவாமி கோயில், பாப்பான்குளம் சீதாப்பிராட்டியாா் உடனுறை ஸ்ரீராமசாமி கோயில், கல்லிடைக்குறிச்சி பூமாதேவி சமேத ஆதிவராகப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

கடையம் வில்வவனநாதசாமி கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 6 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையைத் தொடா்ந்து தேருக்கு எழுந்தருளினா். பின்னா் தேரோட்டம் நடைபெற்றது.

பாப்பான்குளம் ஸ்ரீ ராமசுவாமி - சீதாப்பிராட்டியாா் கோயில், கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள்- பூமாதேவி கோயில்களிலும் ஏப். 6 இல் கொடியேற்றப்பட்டது. வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com