முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நாளை கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 29th April 2022 11:07 PM | Last Updated : 29th April 2022 11:07 PM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் மே 1தொழிலாளா் தினத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் உள்ளஅனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1 ஆம் தேதி காலை 10 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் விவரம், அவற்றின் முன்னேற்றம், நிதி செலவினங்கள் மற்றும் ஊராட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணிகள் தொடா்பான விவரங்கள் விவாதிக்கப்பட உள்ளது.
இக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளின் அனைத்து வாக்காளா்களும் கலந்து கொள்ளலாம் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.