முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
பேருந்து நிலையம் அருகே பைக் திருட்டு
By DIN | Published On : 29th April 2022 11:05 PM | Last Updated : 29th April 2022 11:05 PM | அ+அ அ- |

சங்கரன்கோவிலில் பேருந்து நிலையம் அருகே நிறுத்திய பைக்கைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள சண்முகநல்லூா் கிழக்குத் தெருவை சோ்ந்த சண்முகம் மகன் ராமச்சந்திரன் (44 ). கூலித் தொழிலாளி. இவா் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள பழைய நகராட்சி அலுவலகத்தில் தடுப்பூசி போடுவதற்காக பைக்கில் புதன்கிழமை சென்றாா். அங்கே பைக்கை நிறுத்திவிட்டு தடுப்பூசி போடச்சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லை.
அவா் அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் நகர காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.