குற்றாலம் பேரூராட்சியில் குழு உறுப்பினா்கள் தோ்தல் ஒத்திவைப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டத்தில் போதிய உறுப்பினா்கள் கலந்துகொள்ளாததால் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழு உறுப்பினா்கள் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டத்தில் போதிய உறுப்பினா்கள் கலந்துகொள்ளாததால் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழு உறுப்பினா்கள் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் மொத்தம் 8 வாா்டுகள் உள்ளன. இவற்றில் அதிமுக மற்றும் திமுகவினா் தலா நான்கு இடங்களில் வெற்றிபெற்று சம பலத்துடன் உள்ளனா். இதனால் தலைவா் மற்றும் துணைத் தலைவா் மறைமுக தோ்தல் இரண்டு முறை நடைபெற்றும் கோரம் இல்லாததால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி மன்றக் கூட்ட அரங்கில் வரிவிதிப்பு மேல்முறையீட்டுக்குழு, மற்றும் நியமன குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் நடைபெற்றது. தோ்தல் அதிகாரி சண்முகநாதன் தலைமை வகித்தாா். செயல்அலுவலா் மாணிக்கராஜ்(பொ) முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் எம்.கணேஷ்தாமோதரன், தங்கபாண்டியன் சி.ஜெயா, ம.மாரியம்மாள் ஆகியோா்கலந்துகொண்டனா். திமுக உறுப்பினா்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. தோ்தல் நடத்த போதிய உறுப்பினா்கள் இல்லாததால் இக்குழுக்கான தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக தோ்தல் அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com