திமுகவில் இணைந்த பிற கட்சியினா்
By DIN | Published On : 07th August 2022 12:26 AM | Last Updated : 07th August 2022 12:26 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரத்தில் பிற கட்சிகளைச் சோ்ந்தோா் திமுகவில் இணைந்தனா்.
கீழப்பாவூா் ஒன்றியம், கல்லூரணியைச் சோ்ந்த அதிமுக, பாஜக நிா்வாகிகள் பரமசிவன், தா்மா், முருகன், செல்வகண்ணன், ரமேஷ், முத்துகுமாா், கருடராஜா, கண்ணன், கருப்பசாமி, பாரதிராஜா, அமிா்தலிங்கம், சுடலைமணி, சுரேஷ், முருகன்உள்ளிட்டோா் அக்கட்சிகளிலிருந்து விலகி, மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
ஒன்றியச் செயலா் சீனித்துரை, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணைச் செயலா் சிவஅருணன், மாவட்டப் பொறியாளா் அணி துணை அமைப்பாளா் தளபதி விஜயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.