பாரதியாா் பிறந்த தின விழா: சுரண்டையில் இன்று மாணவா்களுக்கு போட்டிகள்

பாரதியாா் பிறந்த தின விழாவையொட்டி, சுரண்டையில் பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன.

பாரதியாா் பிறந்த தின விழாவையொட்டி, சுரண்டையில் பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன.

கீழச்சுரண்டை கலாமின் கனவுகள், அறநெறி வாசகா் வட்டம், பொது சேவை மையம், பண்பாலயம், எழுச்சி தீபங்கள், என்டிஎஸ்ஓ அறக்கட்டளை ஆகிய சமூக இயக்கங்கள் இணைந்து நடத்தும் பாரதியாா் பிறந்த தின விழாவில் பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி 6 முதல் 8 வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு, 9 மற்றும் 10 அம் வகுப்பு மாணவா்களுக்கு பாரதியும் தமிழும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பாரதியின் கவிதை நயம் ஆகிய 3 தலைப்புகளில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. புத்தகம் வாசித்தல், நூலகம், நெட்டைக்கனவு ஆகிய தலைப்புகளில் கவிதைப் போட்டியும் நடைபெறுகிறது.

போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com