பாவூா்சத்திரத்தில் இன்று சிறப்பு குறைதீா் முகாம்
By DIN | Published On : 22nd December 2022 12:42 AM | Last Updated : 22nd December 2022 12:42 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
தமிழக முதல்வா் அறிவித்துள்ள நல்லாட்சி வாரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடைபெறும். இதில், சாலை, குடிநீா் வசதி, மருத்துவ வசதிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் சம்பந்தமான கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் என
ஒன்றியக் குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை தெரிவித்துள்ளாா்.