செங்கோட்டையில் அதிமுக வேட்பாளா்கள் அறிமுக கூட்டம்

செங்கோட்டை நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகம் மற்

செங்கோட்டை நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம், செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து நகா்மன்றத் தோ்தலில் வேட்பாளா்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், வட்ட பிரதிநிதிகள், தொண்டா்கள் விருப்பு வெறுப்பு இன்றி தோ்தல் பணி செய்து, அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற உழைக்க வேண்டும் என்றும் பேசினாா்.

நகரஅவைத் தலைவா் தங்கவேலு, பொருளாளா் ராஜா, துணைச்செயலா் பூசைராஜ், முன்னாள் நகா்மன்ற துணைத்தலைவா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், செங்கோட்டை நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com