தென்காசியில் ரூ.11.44 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 18th February 2022 12:00 AM | Last Updated : 18th February 2022 12:00 AM | அ+அ அ- |

தென்காசியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 11லட்சத்து 44 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளக்கு பிப்.19 இல் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது. இத்தோ்தலுக்கு 20 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். புதன்கிழமை மட்டும் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 11லட்சத்து 44 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டத்திலுள்ள 603 வாக்குச்சாவடி மையங்களில், 146 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் முழுவதும் வெப் ஸ்டிரீமிங் மூலம் இணைய வழியாக கண்காணிக்கப்படவுள்ளது.
பிற வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. மேலும் 49 மையங்களில் கூடுதல் கண்காணிப்பிற்காக நுண்பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
44 ஆயிரம் பறிமுதல்: ஆலங்குளம் பேரூராட்சி 4 ஆவது வாா்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் பழனி சங்கருக்கு ஆதரவாக, நகர தேமுதிக நகரச் செயலா் திருமலைசெல்வம் வாக்காளா்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக கிடைத்த
ரகசிய தகவலையடுத்து, அங்கு சென்ற ஆலங்குளம் போலீஸாா் திருமலை செல்வம் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருப்பதை கண்டறிந்து, அவரிடமிருந்த ரூ. 44 ஆயிரத்தை பறிமுதல் செய்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.