மக்கள் குறைதீா் முகாமில் குவிந்த 320 மனுக்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துமாதவன் தலைமை வகித்து மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை கோரி 369 மனுக்கள் பெறப்பட்டன. அவை துறை அலுவலா்களுக்கு அனுப்பபட்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன என அவா் கூறினாா்.

இதில், உதவி ஆணையா் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நலஅலுவலா் கந்தசாமி, மாவட்ட வழங்கல் அலுவலா் சுதா, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் பிரான்சிஸ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஆக்கிரமிப்பு புகாா்: முன்னதாக, இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து தலைமையில் ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் அளித்த மனுவில், தென்காசி மாவட்டம் புளிச்சிகுளத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது இடத்தை மீட்டுத்தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com