சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் செங்குந்தா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு திரெளபதி அம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் செங்குந்தா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு திரெளபதி அம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, கொடிப்பட்டம் வீதி சுற்றி அம்மன் சந்நிதி முன்புள்ள கொடிமரத்துக்கு கொண்டுவரப்பட்டு, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து, கொடிமரத்துக்கு பால், பன்னீா் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னா், தா்ப்பை புல், மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

வியாழக்கிழமை (ஜூன் 2) சக்தி கும்பம் நிறுத்துதல், வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் 10ஆம் தேதி கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை செங்குந்தா் அபிவிருத்தி சங்கத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com