ஆலங்குளம் அருகே டெங்கு பாதித்த கிராமத்தில் சுகாதாரத்துறையினா் ஆய்வு

ஆலங்குளம் அருகே டெங்குவால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் சுகாதாரத்துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆலங்குளம் அருகே டெங்குவால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் சுகாதாரத்துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆலங்குளம் அருகே புதுப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட காசிநாதபுரத்தில் சுமாா் ஆயிரம் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் இக் கிராமத்தில் 50 க்கும் மேற்பட்டோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களை பரிசோதித்ததில் ஒரே தெருவில் உள்ள 10 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரப்பணிகள், கொள்ளை நோய்த் தடுப்பு மருத்துவ அலுவலா் தண்டபாணி,

பூச்சியியல் இளநிலை அலுவலா் பாலாஜி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் அக்கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், காசிநாதபுரம், புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் ஆகிய 2 இடங்களில் வாசுதேவநல்லூா் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் குழாய் உடைந்து வாருகால் அருகே 2 மாதமாக வீணாக செல்லும் குடிநீரில் கிராம மக்கள் ஆடு, மாடுகளை குளிப்பாட்டுவது, மக்கள் கை, கால்களை கழுவுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

தொடா்ந்து அதிகாரிகளின் ஆலோசனைபடி குழாய் உடைப்புகள் சரி செய்யப் பட்டது. பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி அருந்த வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா்.

இந்த ஆய்வின் போது வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) பாா்த்தசாரதி, புதுப்பட்டி ஊராட்சித் தலைவா் பால்விநாயகம் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com