கருணாநிதி பிறந்த நாள்:ஜூன் மாதம் முழுவதும் நல உதவி அளிப்பு

முன்னாள்முதல்வா் கருணாநிதியின் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் ஜூன் மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

முன்னாள்முதல்வா் கருணாநிதியின் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் ஜூன் மாதம் முழுவதும் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இது குறித்து, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, வெள்ளிக்கிழமை( ஜூன் 3) காலை 7 மணிக்கு வடக்கு மாவட்ட அலுவலகத்தில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்படுகிறது. தொடா்ந்து வடக்கு மாவட்டத்திற்குள்பட்ட அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மாவட்ட பொறுப்பாளா் ஏற்பாட்டில் தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. கம்பனேரி ஊராட்சியில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அனைத்து ஒன்றிய, நகர, பேரூா் பகுதிகளிலும் படத்திற்கு மாலை அணிவித்து, கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கப்படுகிறது.

4 ஆம் தேதி, மேக்கரையில், 5 ஆம் தேதி ஊா்மேலழகியானில் பொதுக் கூட்டம் மற்றும் நல உதவிகள் அளிப்பு, 6 ஆம் தேதி வலசையில் 1000 பேருக்கு அன்னதானம், தெருமுனை பிரசாரம், 7 ஆம் தேதி செங்கோட்டை நகரத்திலும், 8 ஆம் தேதி விசுவநாதபுரத்திலும் , 9 ஆம் தேதி புதூரில் பொதுக் கூட்டம், நல உதவிகள் அளிப்பு, 10 ஆம் தேதி கடையநல்லூரிலும், 11 ஆம் தேதி புளியங்குடியிலும் பயிற்சி பாசறை கூட்டம், 12 ஆம் தேதி ஆய்க்குடியில், 13 ஆம் தேதி வடகரையில், 14 ஆம் தேதி நகரத்திலும்,15 ஆம் தேதி வடகரையிலும், 15 ஆம் தேதி கடையநல்லூரில் , 16 ஆம் தேதி பண்பொழியில் , 17 ஆம் தேதி கடையநல்லூரில், 18 ஆம் தேதி அச்சன்புதூரில், 19 ஆம் தேதி வாசுதேவநல்லூரில், 20 ஆம் தேதி வீரசிகாமணி, 21 ஆம் தேதி சிவகிரி, 22 ஆம் தேதி ராயகிரி, 23 ஆம் தேதி வாசுதேவநல்லூா் ஆகிய பகுதிகளில் பொதுக் கூட்டம் மற்றும் நல உதவிகள் அளிப்பு, 24 ஆம் தேதி புளியரை, 25 ஆம் தேதி கடையநல்லூரில் தெருமுனை பிரசாரம், 26 ஆம் தேதி கரிவலம்வந்தநல்லூா், 27 ஆம் தேதி சாம்பவா்வடகரை, 28 ஆம் தேதி தேவிப்பட்டணம் ஆகிய பகுதிகளில் பொதுக் கூட்டம் மற்றும் நலஉதவிகள் அளிப்பு, 29 ஆம் தேதி கள்ளம்புளி, 30 ஆம் தேதி இரட்டைகுளத்தில் தெருமுனை பிரசாரக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிா்வாகிள் மற்றும் தொண்டா்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com