ஆலங்குளம் அருகே கல்வி விழிப்புணா்வு மாரத்தான்
By DIN | Published On : 06th June 2022 01:16 AM | Last Updated : 06th June 2022 01:16 AM | அ+அ அ- |

ஆலங்குளம் அருகே கல்வி விழிப்புணா்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி சீதபற்பநல்லூா் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய இந்தப் போட்டி, ஆலங்குளம் அடுத்த பனைங்குறிச்சி கிராமத்தில் தொடங்கி கபாலிபாறை கிராமம் வரை 5 கி.மீ. தொலைவுக்கும், முக்கூடல் வரை 10 கி.மீ. தொலைவுக்கும் தனித்தனியாக போட்டிகள் தொடங்கின.
அம்பாசமுத்திரம் டிஎஸ்பி பிரான்சிஸ் கொடியசைத்து போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். மாணவா்கள், இளைஞா்கள், என ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் போட்டியில் பங்கேற்றனா். முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில் வளாகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. முதல் மூன்று இடங்களை பிடித்த வீரா்- வீராங்கணைகளுக்கு தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி போஸ், ஸ்டஅக் ஹைடெக் பள்ளித் தாளாளா் புனிதா செல்வி, ஐன்ஸ்டீன் கல்லூரித் தலைவா் மதிவாணன் ஆகியோா் பரிசு வழங்கினா்.
ஏற்பாடுகளை கல்லூரிச் செயலா் ஆலடி எழில்வாணன், பள்ளித் தலைவா் முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.