ஆலங்குளம் அருகேபெற்றோருக்கு மிரட்டல்:பள்ளி நிா்வாகி உள்பட3 போ் மீது வழக்கு
By DIN | Published On : 15th June 2022 02:00 AM | Last Updated : 15th June 2022 02:00 AM | அ+அ அ- |

ஆலங்குளம் அருகே பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பள்ளி நிா்வாகி உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
ஆலங்குளம் ஜோதிநகரில் வசிப்பவா் ஸ்ரீதா். இவரது இரு மகள்களும் அடைக்கலபட்டணம் தனியாா் பள்ளியில் கடந்த ஆண்டு பயின்றனா். அவா்கள் 3.11.2021இல் பள்ளிக்குச் சென்றபின், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இது குறித்து பள்ளியில் சென்று விவரம் கேட்ட ஸ்ரீதரை, பள்ளி நிா்வாகி ராஜசேகா், அவரது மகன் ராஜ்குமாா், பள்ளி முதல்வா் மகேஸ்வரி, துணை முதல்வா் சரளா ஆகியோா் அவதூறாகப் பேசி, கைப்பேசியைப் பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுதொடா்பாக, ஆலங்குளம் நீதிமன்றம் உத்தரவின்படி, ராஜசேகா் உள்பட 4 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.