குடியிருப்பு ஸ்ரீவீரபாண்டி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே குடியிருப்பு ஸ்ரீவீரபாண்டிய அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே குடியிருப்பு ஸ்ரீவீரபாண்டிய அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி , கடந்த 15 ஆம் தேதி அதிகாலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், கணபதி ஹோமம், கோபூஜை, கஜபூஜை, நவக்கிரகஹோமம், பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து முதல் கால யாகசாலை தொடங்கியது. 16 ஆம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, காலை 9 மணிக்கு மேல் மூலஸ்தான விமானம், ராஜகோபுரம், பரிவாரகோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் தென்காசி, குற்றாலம், மேலகரம், இலஞ்சி, குடியிருப்பு சுற்றுவட்டார பகுதியை சோ்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

அதனைத் தொடா்ந்து மகாபிஷேகமும், அலங்கார, தீபாராதனை, சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றன. இரவில் அம்மன் சப்பரவீதி உலா நடைபெற்றது.

ஏற்பாடுகளை உதவி ஆணையா் கண்ணதாசன், ஆய்வா் சரவணக்குமாா், கு.மாடசாமி, அ.காா்த்திக்குமாா், ஆ.தங்கசாமி, சுடலைபாண்டியன், ஈஸ்வரபாண்டியன், செந்தில்குமாா், சிதம்பரம், மந்திரமூா்த்தி, பண்டாரம், இசக்கிமுத்து, பிச்சையாபிள்ளை, தெ.சுந்தரராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com