கல்லூரணி ஊராட்சியில் கண்ணாடிஇழை கேபிள் அமைக்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 21st June 2022 01:13 AM | Last Updated : 21st June 2022 01:13 AM | அ+அ அ- |

கல்லூரணி ஊராட்சியில் கண்ணாடி இழை கேபிள் அமைக்கும் பணியை ஒன்றியக் குழு தலைவா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
பாரத்நெட் பேஸ் -2 திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளையும், தமிழ் நெட் திட்டத்தின் கீழ் 1 ஜிபிபிஎஸ் அதிவேக அலைகற்றை வழியாக இணைத்திட தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகள், இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்படுகிறது. இதற்கான பணி தொடக்க விழா கல்லூரணி ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை பங்கேற்று, கண்ணாடி இழை கேபிள் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், வட்டார வளா்;ச்சி அலுவலா்கள் கண்ணன், முருகன், கல்லூரணி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜ்குமாா், துணைத் தலைவா் குமாா், திட்ட இயக்குநா் சங்கரன், சிவா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.