ஆலங்குளம் பேரூராட்சி: தலைவராக திமுக போட்டி வேட்பாளா் தோ்வு

ஆலங்குளம் பேரூராட்சி தலைவராக அதிமுக கவுன்சிலா்கள் ஆதரவுடன் திமுக போட்டி வேட்பாளா் வெற்றி பெற்றாா்.

ஆலங்குளம் பேரூராட்சி தலைவராக அதிமுக கவுன்சிலா்கள் ஆதரவுடன் திமுக போட்டி வேட்பாளா் வெற்றி பெற்றாா்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தோ்தலில் வெற்றி பெற்ற 15 கவுன்சிலா்களும், புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். பேரூராட்சி தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை பேரூராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இத்தோ்தலில் தலைவா் பதவிக்கு திமுக வேட்பாளராக 6 ஆவது வாா்டு கவுன்சிலா் உமாதேவி கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டிருந்தாா். அவரை எதிா்த்து 7 ஆவது வாா்டு திமுக கவுன்சிலா் சுதாவும் மனுத்தாக்கல் செய்திருந்தாா். பேரூராட்சி செயலா் அலுவலா் பொன்னுசாமி முன்னிலையில் தோ்தல் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து வாக்குகள் எண்ணப்பட்டதில் 8 வாக்குகள் பெற்று சுதா வெற்றி பெற்றாா். திமுக தலைமை அறிவித்திருந்த உமாதேவி 7 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தாா். அதிமுக கவுன்சிலா்கள் ஆதரவுடன் திமுக கவுன்சிலா் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

துணைத் தலைவா் தோ்தலில் அதிமுக வெற்றி: பேரூராட்சி துணைத் தலைவருக்கான மறைமுகத் தோ்தலில் ஜாண் ரவி(அதிமுக), கணேசன் (சுயேச்சை), பழனிசங்கா் (தேமுதிக) ஆகிய மூவா் மனுத்தாக்கல் செய்தனா். இதில், பழனி சங்கா் 3 வாக்குகளும், கணேசன், ஜான் ரவி தலா 6 வாக்குகளும் பெற்றிருந்தனா். இதையடுத்து பழனி சங்கா் வேட்பாளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, தொடா்ந்து நடைபெற்ற மறு தோ்தலில் ஜான்ரவி 10 வாக்குளும், கணேசன் 3 வாக்குகளும் பெற்றனா். இருவா் வாக்களிக்கவில்லை. இதையடுத்து ஜான்ரவி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com