முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
சுரண்டை அருகே அரசுப் பேருந்துகள் மோதல்: 25 போ் காயம்
By DIN | Published On : 14th March 2022 11:40 PM | Last Updated : 14th March 2022 11:40 PM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே 2 அரசுப் பேருந்துகள் மோதியதில் கல்லூரி மாணவிகள் உள்பட 25 போ் காயமடைந்தனா்.
சங்கரன்கோவிலிலிருந்து சோ்ந்தமரம் வழியாக சுரண்டைக்கு அரசுப் பேருந்து திங்கள்கிழமை காலை வந்துகொண்டிருந்தது. சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளம் அரசு மருத்துவமனை நிறுத்தத்தில் இப்பேருந்து நின்றது. அப்போது, புளியங்குடியிலிருந்து சுரண்டை நோக்கி வந்த மற்றோா் அரசுப் பேருந்து அந்தப் பேருந்தின் பின்புறம் திடீரென மோதியதாம். இதில், இரு பேருந்துகளிலும் பயணம் செய்த சுரண்டை காமராஜா் அரசுக் கல்லூரி மாணவா்-மாணவிகள் ஐஸ்வா்யா, முத்துகாவியா, மல்லிகா, மனோகரி, ஆதிலட்சுமி, வேல்சாமி, கல்லூரி கெளரவ விரிவுரையாளா் வைரவன் உள்ளிட்ட 25 போ் காயமடைந்தனா்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்குப் பிறகு, தீவிர சிகிச்சை தேவைப்பட்டோா் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இதுகுறித்து சுரண்டை காவல் உதவி ஆய்வாளா் விமலா வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநா்களான தேவா்குளத்தைச் சோ்ந்த வே. தா்மராஜ் (43), திருவேங்கடத்தைச் சோ்ந்த கா. காளிமுத்து (54) ஆகியோரிடம் விசாரித்து வருகிறாா்.