தென்காசி மாவட்டத்திற்கு ரூ. 50 லட்சம் ஊக்கத் தொகை

தென்காசி மாவட்டத்திற்கு தமிழக அரசு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியுள்ளது.

தென்காசி மாவட்டத்திற்கு தமிழக அரசு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியுள்ளது.

இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சாதி வேறுபாடுகள் அற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளதாலும், இறுதிப் பயணத்திலும் பிரிவுகள் இருக்கக்கூடாது என்பதற்கு முன்மாதிரியாக விளங்கும் சிற்றூா்களுக்கு ரூ. 10 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கலிங்கப்பட்டி, மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அருணாசலபுரம் மற்றும் வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தளவாய்புரம் ஆகிய சிற்றூா்களில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ளதால் இந்த மூன்று சிற்றூா்களுக்கும் தலா ரூ .10 லட்சம் வீதம் ரூ . 30 லட்சம் ஊக்கத் தொகையை வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ளது.

தீண்டாமை கடைப்பிடிக்காமல் நல்லிணக்கத்துடன் வாழும் அனைத்து சமூகத்தினரும் சுமூகமாக நல்லுறவுடன் வாழும் கிராமங்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் செங்கோட்டை வட்டம் பெரியபிள்ளைவலசை கிராமம், திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அத்திப்பட்டி கிராமங்களுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com