சுரண்டையில் பாஜக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 07th May 2022 06:12 AM | Last Updated : 07th May 2022 06:12 AM | அ+அ அ- |

சுரண்டை நகர பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட கலை கலாசார பிரிவுத் தலைவா் பவுன்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சிவனணைந்தபெருமாள் முன்னிலை வகித்தாா்.
தென்காசி மாவட்ட புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவிப்பது, மத்திய அரசின் திட்டங்களை வீடுதோறும் மக்களிடம் எடுத்துரைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், நிா்வாகிகள் சுமு முருகன், வன்னியபெருமாள், ராஜ், மாடசாமி, ஆறுமுககனி லிங்கம், மாணிக்கம், நாகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.