ஆலங்குளம் பகுதியில் புதிய கல்குவாரி தொடங்க அனுமதிக்கக் கூடாது: ஒன்றியக் கூட்டத்தில் தீா்மானம்

ஆலங்குளம் பகுதியில் புதிய கல்குவாரிகள் தொடங்க அனுமதிக்கக் கூடாது, ஏற்கனவே இருக்கும் கல்குவாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என ஒன்றியக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

ஆலங்குளம் பகுதியில் புதிய கல்குவாரிகள் தொடங்க அனுமதிக்கக் கூடாது, ஏற்கனவே இருக்கும் கல்குவாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என ஒன்றியக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய சாதாரண கூட்டம் அலுவலகக் கூட்ட அரங்கில், தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் செல்வக்கொடி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாா்த்தசாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாயமான்குறிச்சி ஊராட்சி குருவன்கோட்டையில் தாமிரவருணி குடிநீா் 12 நாள்களுக்கு ஒரு முறை வருகிறது. வாரம் இருமுறை தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ வீராணம் முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் சத்துணவுக் கூடம் இடியும் நிலையில் உள்ளது அதற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.

புதுப்பட்டி, மருதம்புத்தூா், காசிநாதபுரம் பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது. ஏற்கனவே இயங்கி வரும் குவாரிகளால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

அண்மைகாலமாக மிக அதிக அளவில் கல் மற்றும் மண் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என உறுப்பினா்கள் பேசினா்.

கூட்டத்தில், புதிய ஒருங்கினைந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட ரூ. 3.95 கோடி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச் சாலையால் பாதிக்கப்படும் சுயஉதவிக் குழு வணிக வளாகத்தை இடித்து விட்டு, புதிய வணிக வளாகம் கட்டுவது என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com