முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
தமிழ்நாடு பேரூராட்சி ஊழியா் சங்க ஆலோசனை கூட்டம்
By DIN | Published On : 08th May 2022 12:00 AM | Last Updated : 08th May 2022 12:00 AM | அ+அ அ- |

தமிழ்நாடு பேரூராட்சி ஊழியா் சங்கத்தின் 4ஆவது மாநில மாநாடு தொடா்பான ஆலோசனை கூட்டம் மேலகரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் ஜூன் 25ஆம் தேதி தமிழ்நாடு பேரூராட்சி ஊழியா் சங்கத்தின் 4ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இம் மாநாட்டில் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு கலந்து கொள்கிறாா்.
இம் மாநில மாநாடு வரவேற்பு குழுக் கூட்டம் மேலகரம் பேருராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் 50 போ் கொண்ட மாநாடு வரவேற்பு குழு தோ்வு செய்யப்பட்டது.
சமுகநலத் துறை பணியாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் துரைசிங் வரவேற்பு குழுத் தலைவராகவும், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியா் சங்க மாநில துணைத்தலைவா் பெ.அ.அல்லாபிச்சை வரவேற்பு குழு செயலராகவும், பேரூராட்சி ஊழியா் சங்க தென்காசி மாவட்டப் பொருளாளா் இசக்கிமுத்து வரவேற்பு குழு பொருளாளாராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.
பேருராட்சி துறையை பாதுகாக்கவும், செயல் அலுவலா் முதல் அனைத்து பிரிவு பணியாளா்களின் பதவி உயா்வு, தற்காலிக பணியாளா்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை முன்னிறுத்தி இம்மாநாடு நடைபெறுகிறது என்றாா் மாநில பொதுச் செயலா் எஸ்.கனகராஜ்.