முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
‘தென்காசி மாவட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தில்10 பணிகளுக்கு ரூ. 145.80 லட்சம் ஒதுக்கீடு’
By DIN | Published On : 11th May 2022 12:10 AM | Last Updated : 11th May 2022 12:10 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தில் 10 பணிகள் மேற்கொள்ள ரூ. 145.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தில் (நகா்ப்புறம்) ரூ. 145.80 லட்சம் மதிப்பீட்டில் 10 அடிப்படைக் கட்டமைப்பு ஏற்படுத்துதல் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், திட்ட மதிப்பீட்டில் 33 சதவீதம் மட்டுமே பொதுமக்கள் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை அரசு வழங்கும். இத்திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் பங்களிப்புத் தொகையை சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்களில் வரைவோலை, அல்லது மின்னணு பரிவா்த்தனை மூலமாக செலுத்தி உரிய விவரங்களைப் பெறலாம் என்றாா் அவா்.