சுரண்டை கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சுரண்டை: சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் 10 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் இத்திருக்கோயில் திருவிழா கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா நாள்களில் தினமும் இரவு 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இரவு 10 மணிக்கு கோயில் கலையரங்கில் பல்சுவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 9ஆம் திருநாளான புதன்கிழமை மாலை 3 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது.

இதில் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகிகள் மற்றும் ஏழு சமுதாய மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com