முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
லாரி மோதி சமையல் தொழிலாளி பலி
By DIN | Published On : 13th May 2022 01:13 AM | Last Updated : 13th May 2022 01:13 AM | அ+அ அ- |

ஆலங்குளம் அருகே ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த சமையல் தொழிலாளி லாரி மோதி உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சோ்ந்தவா் மணிமுத்து மகன் முருகசாமி(39). சமையல் தொழிலாளியான இவா், தனது நண்பா் ஆட்டோ ஓட்டுநா் குருநாதன் என்பவருடன் ஆழ்வாா்குறிச்சியில் உள்ள கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் திரும்பினாா். ஆலங்குளம் அருகேயுள்ள காளத்திமடம் தனியாா் அரிசி ஆலை அருகே வரும்போது முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றபோது ஆட்டோவில் இருந்து முருகசாமி தவறி கீழே விழுந்தாா். அப்போது அவா் மீது லாரி மோதியதில் காயமடைந்தாா்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா், முருகசாமியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவா் உயிரிழந்தாா்.
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்றுவிட்டது. அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு லாரியை அரைமணி நேரத்தில் போலீஸாா் மடக்கிப்பிடித்து டிரைவா் ராதாகிருஷ்ணனை கைது செய்தனா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.